நீங்கள் ஒரு பரபரப்பான மாலில் ஷாப்பிங் செய்ய சென்று இருக்கீர்கள் அங்கே ஒருவர் உங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் அவரை தவிர்க்க நினைத்து அவரை பார்க்காமல் திரும்பி நின்று கொள்கிறீர்கள். சிறிது நேரம் கழிந்த பின்பு திரும்புகையில் அந்த நபர் இன்னும் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார் உடனே நீங்கள் கோபப்பட்டு அந்த நபரை அடிக்க கையில் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு அடிக்க போக
‘சார், என்னாச்சி என்ன வேணும் என்று அங்கே பணி புரியும் பணியாள் கேட்க, நீங்கள் எதிரில் இருக்கும் அந்த நபரை காட்டி நடந்தவற்றை கூற அந்த பணியாள் சிரிக்கிறான். நீங்கள் புரியாமலும் கோபத்துடனும் அவனை ‘என்ன நடந்தது சிரிக்கிர’ என்று கேட்க அவன்
‘சார் அது கண்ணாடி அதுல தெரியிரது உங்க பின்பம் என்கிறான் அந்த நொடி நீங்கள் எப்படி உணர்வீர்கள். இப்படி ஒரு நிலை யாருக்காவது வருமா என்று நீங்கள் நினைப்பீர்களானால் தயவு செய்து அதிர்ச்சியடையாதீர்கள் ஏனென்றால் அமெரிக்காவில் 50-ல் ஒருவர் இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஆய்வு.
Prosopagnosia தமிழில் முகக்குருடு என்று அழைக்கலாம். இதை எளிதாக face blindness என்கின்றனர் இந்த பிரச்சனை மூளையில் இருக்கும் முகத்தை அடையாளம் காணும் அமைப்பான fusiform face area எனும் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளினால் உருவாகிறது என்கீறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நாடு திரும்பிய அமெரிக்க ராணுவத்தினர் பலர் தங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களை அடையாளம் காண முடியாமல் தவிர்த்தனர் அப்பொழுது அந்த வீரர்களின் நிலைக்கு காரணம் தெரியாமல் தவித்த அறிவியல் சுமார் அய்ம்பது ஆண்டுகள் கழித்து 1985ல் The man who mistook his wife for a hat என்ற புத்தகத்தின் மூலம் உலகை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. அய்ம்பது ஆண்டுகள் விடை தெரியாமல் அழைந்த உலகத்திற்கு ‘முகக்குருடு’ பிரச்சனையை உலகுக்கு அறிவித்தவர் டாக்டர். ஆலிவர் வுல்ஃப் சேக்ஸ்.
நரம்பியல் மருத்துவர், சூழலியலாளர், அறிவியல் வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் என்று பல முகங்களை கொண்டிருந்தார் டாக்டர்.ஆலிவர். முகக்குருடு (face blindness) பிரச்சனையை உலகுக்கு அறித்தவர் என்று ஆலிவர் பெயர் பெற்றார் என்பதை தாண்டி அவர் பிறவியிலேயே முகக்குருடு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர் என்பது உலகை வெகுவாக ஈர்த்தது. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுப் போல் பலமுறை தன் முகத்தையே தன்னால் அடையாளம் காண முடியாமல் போனதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ப்ராட் பிட் கூட முகக்குருடு பிரச்சனை உடையவர் என்று இணையத்தில் பல வீடியோக்கள் உலா வருகின்றன.
By Bad Fox