தமிழில் மாயா திரைப்படம் நயன்தார நடிப்பில் வெளிவந்தது இந்தப்படம் சபிக்கப்பட்ட படங்கள் எனும் கருத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. மாயா திரைப்படத்தின் ஒரு காட்சியில் சபிக்கப்பட்ட படங்கள் என்று இன்டர்நெட்டில் இருப்பது போன்று காட்டப்பட்டது. உண்மையில் அப்படி ஏதானும் படங்கள் இருக்கின்றனவா என்கிற முயற்சியில் கிடைத்தவை தான் வரவிருக்கும் மூன்று படங்கள். இந்த மூன்று படங்கள் எடுக்கப்படும் பொழுதும, திரைப்படம் திரையிடப்படும் பொழுதும் நடந்த சில அசம்பாவித சம்பவங்களை தந்துள்ளோம் அதை வைத்து இது சாபமா இல்லை தற்செயலா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்
1. போல்டர்ஜிஸ்ட் I, II,III, (Poltergeist- I, II, III 1982to1985)
1985-ல் வெளிவந்த போல்டர்ஜிஸ்ட் என்ற திரைப்படம் இதுவரை வந்த சபிக்கப்பட்ட படங்களில் மிக மோசமாக சபிக்கப்பட்ட படமாக கருதப்படுகிறது. இந்த படத்தின் மூன்று பாங்களில் நடித்த பலரும் படத்தின் உருவாக்கத்தின் போதும் படம் வெளியான ஆண்டிலும் மரணத்தை தழுவிவுள்ளனர். போல்டர்ஜிஸ்ட் ஒன்றில் நடித்த டாமினிக் டியுன் (Dominique Dunne) என்ற படம் வெளியான ஆண்டே அவரது காதலரால் கொலை செய்யப்பட்டார்.அதே படத்தில் நடித்த ஹன்றி கேன் (Henry kane) என்ற நடிகர் படத்தின் மூன்றாம் பாகம் வெளியான ஆண்டு வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்துபோனார். இரண்டாம் பாகத்தில் நடித்த வில்லியம் சாம்சன் மூன்றாம் பாகம் வெளியாகும் சமயத்தில் சிறுநீரக குறைபாட்டால் மாண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக போல்டர்ஜிஸ்ட் மூன்றில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஹீத்தர் ஓ ரூக் (Heather o rouke) என்ற 12 வயதான நடிகை படபிடிப்பு தளத்தில் மரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். அதன் பின் அவரைப்போன்றே உருவமைப்பு கொண்டவரை கொண்டு படம் நிறைவு செய்யப்பட்டது.
2.தி ஓமன் (The Omen – 1976)
மக்கள் மத்தியில் மிக பிரபலமான இந்த படமும் சபிக்கப்பட்ட படங்களின் வரிசையில் இடம்பெறுகிறது. படபிடிப்பு சென்று கொண்டிருந்த பொழுது படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த கிரிக்கோகரி பெக்வும் படத்தின் தாயாரிப்பாளர் மேஸ்நியுபிளிடும் தனி தனி விமானங்களில் பயணம் செய்யும் பொழுது மின்னலினால் தாக்கப்பட்டனர். பிறகு படம் திரையிடும் சில நாட்களுக்கு முன் கிக்கோரின் பெக்யின் மகன் தற்கொலை செய்து கொண்டார். பின்பு படத்தின் தாயாரிப்பாளர் மேஸ்நீயுபிளட் தங்கியிருந்த தங்கும் விடுதியிலும் தி ஓமன் படத்தில் நடித்த பிரபலங்கள் இருந்த உணவு விடுதியிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டது. படப்பிடிப்பு சமயத்தில் படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் இறந்துபோனர். படத்தில் டிசைனராக பணியாற்றிய ஜான் ரிச்சர்ட்சனுக்கும் அவரது உதவியாளருக்கும் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு அவரது உதவியாளர் விபத்தில் உயிரிழந்தார் அவர் உயிரிழந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த அறிவிப்பு பலகையில் ommen 66.6km என்று இருந்ததாக கூறப்படுகிறது.
3. ஃபேசன் ஆஃப் கிரிஸ்ட் (The Passion of Christ – 2004)
தி ஃபேசன் ஆஃப் கிறிஸ்ட் யேசுவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையிடப்படும் பொழுது மிக பெரிய கண்காணிப்பில் இருந்தது. இந்த படத்தில் யேசுவாக நடித்த ஜிம் கேவிசல் படபிப்பு தளத்தில் மின்னலினால் தாக்கப்பட்டார். படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் மெச்சலின் இரண்டு முறை மின்னலால் தாக்கப்பட்டார். இதை முன் வைத்து ஒரு சிறு கூட்டம் இந்த படத்தினர் யேசுவை கோபப்படுத்திவிட்டதாக கூறி போராட்டம் நடத்தினர்.
……..by சிரிப்பு மன்னன்