சினிமா…!! சினிமா…!!

பதேர் பாஞ்சாலி (1955)

திரைகதை, இயக்கம்: சத்யஜித்ரே

ஒளிப்பதிவு: சுபத்ரே மித்ரா

இசை: ரவிசங்கர்

எடிட்ங்: சுலால் தத்தா

மொழி: வங்காளம்

கதைசுருக்கம்
சிறுமி ஒருத்தி பழங்களைத் திருடுவதைப் பார்த்த அப்பழமரவீட்டிற்குச் சொந்தக்கார அம்மா அவளைத் திட்டுகின்றார்.இதனைச் சற்றும் கவனிக்காது அச்சிறுமியும் அப்பழங்களைக் கொண்டு சென்று காட்டிற்கு நடிவிலே அமைந்துள்ள தனது வீட்டில் உள்ள வயதுபோன பாட்டிக்குக் கொடுக்கின்றார்.அப்பாட்டியும் அச்சிறுமிக்குத் தான் சமைக்கும் உணவுகளினை கொடுக்கும்.சில சமயங்களில் பாட்டுகள் பாடி அச்சிறுமியை மகிழ்விக்கும்.பிராமணரான அச்சிறுமியின் தந்தையும் கதைகள் எழுதுபவராவார்.தான் எழுதும் கதைகளினை நம்பி குடும்ப வாழ்க்கையினை சமாளிப்பவராகவும் விளங்குகின்றார்.அச்சமயம் அவர் மனைவியும் இரண்டாம் குழந்தையாக அப்புவைப் பெற்றெடுக்கின்றார்.அப்புவும் வளர்கின்றான்.சகோதரியினால் உணவுகளை அன்பாக ஊட்டப்பெற்றுப் பின்னர் தாயின் அரவணைப்பில் வாழும் அப்பு சகோதரியுடன் வீட்டிற்கு வெளியில் செல்லவும் ஆசை கொள்கின்றான்.இருவரும் வீட்டிற்கு வெளியில் அமைந்திருக்கும் புகையிரதப் பாதை வழியே ஓடுகின்றனர் அச்சமயம் அங்கு பலத்த மழையும் கொட்டுகின்றது.மழைச் சாரலில் பலமாக நனைந்து கொண்ட அப்புவின் சகோதரி வீட்டிற்குச் சென்ற பின்னர் கடும் நோயால் வாட்டப்படுகின்றாள்.அச்சமயம் வெளியூர் சென்றிருந்த அவள் தந்தையும் திரும்பி வருகையில் மகள் இறந்துவிட்டாள் என்பதனைத் தனது மனைவி கூறக்கேட்டு ஓவெனக் கதறி அழுகின்றார்.பெருமழையினால் இடிந்து விழும் நிலையிலிருந்த அவர்களின் மண்வீட்டைப் பார்த்து பயந்து போய் அக்குடும்பம் வேறூரை நோக்கி மாட்டுவண்டியில் புறப்படுகின்றது

இந்தப்படத்தில் சத்யாஜித்ரே இரண்டு குழந்தைகள் மூலம் வாழ்கையின் உண்மைகளைச் சொல்ல முயன்றிருக்கிறார். பெரியவளாக வளர்ந்துக்கொண்டிருக்கும் துர்காவும் அவள் தம்பி அபுவும் இரண்டு நட்சத்திரங்கள் போல ஒளிர்கிறார்கள். அவர்கள் இருவரின் நடிப்பும் மிக இயல்பாக இருக்கிறது. இந்த கருப்பு வெள்ளை திரைப்படம் வங்கத்தின் கிரமங்களின் அழகையையும், தூய்மையையும் காட்டுகிறது.

அதே சமயம் அன்றைய கால வங்கத்தின் வறுமை நிலையையும், அதை எதிர் கொள்ளும் இரு குழந்தைகள் என படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கருப்பு வெள்ளை நிறத்தை போல இன்பமும் துன்பமும் அதை எதிர் கொள்ளும் குழந்தைகள் என ஒரு காவியமாகவே திகழ்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s