“கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி”என்பார் தமிழ் குடியை ஆனால் இன்று நாம் நம் வரலாறு அழிந்து அல்லது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வெறும் வார்த்தைகளில் மட்டும் நம் வரலாற்றை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இன்று இன்று தமிழனின் தொன்மை உலகறிய கிடைத்த மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு புதையல் தான் கீழடி. இந்த பதிவு கீழடி குறித்ததல்ல. தமிழர்கள் மீதான குற்றச்சாட்டாக தமிழ் சான்றோர் பெருமக்களே வைப்பது நாம் பேசி திரியும் நம் பழங்கதை தான். தமிழின், தமிழனின் தொன்மையின் பெருமையை பறைசாற்ற நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதே அதற்கு காரணம் ஆனால் நாம் நம் அன்றாட வாழ்வில் சக மனிதர்களுடன் பேசும் ஒவ்வொரு வாங்கியமும் ஒரு வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால் உண்மையில் நாம் எத்துணை பெருமை மிக்கவர் என்பதை உலகுறிவுக்கு புகட்டிவிடலாம்.
நம் விடுகளில் வயதில் மூத்தவர் எப்போதும் குழந்தைகளிடம் சொல்வர்கள் அதே நம் வீட்டின் கூரை மீது நின்று கொண்டு காக்கை ஒன்று சத்தம் போடுகிறது அப்படியானல் இன்றைக்கு யாரோ விருந்தாளி நம் வீட்டுக்கு வரப்போகிறார்கள் என்று. இப்போதெல்லாம் இது மூடநம்பிக்கை என்றாகிவிட்டது காக்கைக்கு மாறாக நம் செல்போன் மணி அடித்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் இந்த காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற வாக்கியம் தமிழரின் வரலாற்று தொன்மம் என்றால் நம்புவீர்களா?
தமிழ்நாட்டில் அழகன்குளம் என்ற இடத்தில் நடந்ந அகழ்வராய்ச்சியில் ஒரு பானை ஒன்று உடைந்த நிலையில் கிடைத்தது அந்த பானையை ஒட்டவைத்து பார்த்தப் பொழுது அதில் ஒரு கிரேக்க நாட்டு கப்பலின் உருவம் வரையப்பட்டிருந்து. அந்த வரைபடத்தை யாரே ஒருவர் துறைமுகத்தில் வந்து சேர்ந்த பொழுது வரைந்திருக்கலாம் அல்லது அந்த காலத்தில் பெண்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாமல் இருந்ததால் அவள் ஏக்கத்தோடு வரைந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நமக்கு இதன் மூலம் புப்படுவது கப்பல் வழி போக்குவரத்தும், கப்பல் வழி வாணிபமும் அன்றைய மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது என்பதுதான். ஆனால் ‘காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்’ எனும் வாக்கியம் அழகன்குளம் பானையை விட பழையது தெரியுமா. இன்று இருக்கும் இந்த இந்தியாவின் பழமையான நகரம் என்றால் அது சிந்து சமவெளியும், தற்போது கிடைத்திருக்கும் கீழடியும் தான் இதில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது சிந்து சமவெளியில் தான் அதுவும் கூட தமிழரின் நகாரிகம் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த சிந்து சமவெளி மக்களுக்கும் சுமேரிய மற்றும் எகிப்து மக்களுக்குமிடையே வணிக தெடர்பு இருந்து என்பது சிந்து சமவெளி பகுதியில் கிடைத்த சுமேரிய எகிப்து பழம் நாகரிக சின்னங்கள் மற்றும் சுமேரிய எகிப்து பகுதிகளில் கிடைத்த சிந்து சமவெளி சின்னங்களின் மூலம் தெரியவருகிறது.
சுமேரியாவிலிருந்து சிந்து வந்த வணிக கப்பல் அவ்வளவு எளிதில் சிந்துவை வந்தடைந்திருக்காது ஆகவே அவர்கள் சரியான பாதையை கண்டுபிடிக்க ஒரு பறவையை கொண்டு வந்திருப்பர் அந்த பறவை கப்பலில் உள்ளவர்களுக்கு கரை தெரியாத பொழுது பறந்து சென்று கரை கண்ணில் கரை தென்பட்டதும் திரும்பி வரும் அதன் அடிப்படையில் பறவை திரும்பி வந்த திசையில் அவர்கள் பயணித்து கரை சேருவர். ஆனால் அந்த பறவை காகம் தான் என்பது எப்படி சொல்ல முடியுமானால் புத்த ஜதக கதைகளில் புத்தர் சென்ன கதைகளில் ஒன்றாக வாணிபர்கள் வழிகாட்ட காகத்தை பயண்படுத்தியது ஊர்ஜுதம் ஆகிறது பின்பு பெளத்தம் வளர்ந்து பிற்கால தமிழர்களின் பிரதான மதமாக மாறியப் பின் இந்த கதை மக்களிடம் பரவி பெளத்தம் வீழ்ச்சியடைந்த பின் அது மக்களின் சொல்லாடல்களில் ஒன்றாக மாறி இருக்க வேண்டும்.
இறுதியாக காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்பதை நாம் இப்படி புரிந்துக் கொள்ளலாம் தலைவியை பிரிந்து வாணிபம் செய்ய சென்ற தலைவனை எண்ணி வருந்தி காத்திருந்த தலைவி கடற்கரையில் வந்து திரும்பி செல்லும் காகத்தை கண்டு தலைவன் திரும்பி வருகிறான் என்று அவனுக்காக அவனுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் செய்து காத்திருந்திருக்கலாம்.
இன்றைய தலைமுறையினரிடம் மூடநம்பிக்கை என்று மறைந்துவிட்ட இந்த சொல்லாடல் அடுத்த தலைமுறைனருக்கு ஞாபகம் கூட இல்லாமல் மறந்து போய் நம் வரலாற்றையும் கண்டிப்பாக தொலைத்துவிடுவோம் எனவே நம் வரலாற்றை மனதில் இருத்தி நம் குழந்தைகளுக்கு காக்கை கரைந்தால் விருந்தினவர் வருவர் என்பதன் உண்மை பொருளோடு பயிற்றுவிப்போம்.
………….. Bad fox…………