நாம் அனைவரும் கடிதம் எழுதும் போதும் சரி அல்லது யாரவது ஒருவருக்கு நம் முகவரியை தெரிவிக்கும் போதும் சரி முதலில் நம் வீட்டின் எண் பிறகு தெருவின் பெயர் பிறகு ஊராட்சியோ, நாகராட்சியோ அல்லது மாநகராட்சியோ அதன் பெயரையும் இறுதியாக அந்த இடத்திற்கு உரிய பின் கோடை (Pin code) குறிப்பிடுவோம். ஆனால் என்றாவது இந்த பின் கோடு குறித்து நீங்கள் யோசித்தது உண்டா. ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு பின் கோடு இருப்பினும் அதன் இலக்கம் எல்லா இடங்களிலும் ஆறாகத்தான் இருக்கும் (600001).
Pin codeல் Pin என்பதன் விளக்கம் postal index number தமிழில் அஞ்சலக எண். இந்த பின் கோடு 1972 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்பது. அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகமும் எட்டு மண்டலங்களாக பிர்க்கப்பட்டன. பின் கோட்டில் உள்ள முதல் இலக்கம் அந்த அஞ்சலகம் எந்த மண்டலத்தை சார்ந்தது என்பதை குறிக்கும் உதாரணத்திற்கு தமிழ்நாடு-கேரளா-லட்சதீவு ஆகியவை ஒரு மண்டலமாகும் இந்த பகுதிகளின் பின் கோடு 6-ல் தான் தொடங்கும்.
பின்கோட்டில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது எண்கள் மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை குறிப்பதாகும் உதாரணமாக 60லிருந்து 64 வரை ஆரம்பிக்கும் அஞ்சலக எண்கள் தமிழகத்திற்கு உரியவை. 67லிருந்து69 வரை ஆரம்பிக்கும் அஞ்சலக எண்கள் கேரளத்திற்கு உரியவையாகும்.
இந்த பின் கோடு எட்டு மண்டலங்களுக்கு என்று பிர்த்ததுப்போல் ஒன்பதாவது பின் கோடும் உள்ளது அது இந்திய ராணுவ பயண்பாட்டிற்கு மட்டும் உரியது.
பின்கோடின் முதல் மூன்று எண்கள் எந்த மண்டலம் மற்றும் எந்த மாநிலம் என்பதை தெரிந்துகொள்ள உதவுவதுப்போல் கடைசி மூன்று எண்கள் எந்த அஞ்சலகத்திற்கு உரியது என்பதை தெரிந்துகொள்ள உதவுகிறது.
நீங்கள் டில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடிதம் அனுப்புகிறீர்கள் என்றால் அதில் தமிழில் முகவரியை எழுதினாலும் பரவாயில்லை நீங்கள் குறிப்பிட்டிற்கும் பின் கோட்டினை வைத்து எந்த அஞ்சலகத்தகற்கு உரியது என்று இனம் கண்டு அனுப்பிவிடுவார் டில்லி அஞ்சலகத்தார். ஆகவே ஒர் அஞ்சலகத்தை தெரிந்துகொள்ளப் பயண்படுத்துகிற எண்தான் இந்த பின்கோடு