கதால் வங்கி தெரியுமா உங்களுக்கு? (Love Bank)

நமக்கு உலகில் பணத்தை சேமித்து வைக்கும் வங்கிகளைத்தான் தெரியும், காதலை சேமித்து வைக்கும் வங்கி பற்றி தெரியுமா உங்களுக்கு?

சோலோவாக் (solavakia) எனும் ஐரோப்பிய நாடு தான் காதல் வங்கி இருக்கும் இடம். மரினா எனும் பெண்மனியின் இல்லத்தின் அடித்தளத்தில் தான் இந்த காதல் வங்கி செயல்படுகிறது. காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வாழும் காதல் ஜோடிகள் மலர்களையும், ஆச்சர்யமூட்டும் பரிசுகளையும் பகிரந்துக் கொண்டிருக்க சோலோவாக்கில் வாழும் ஜோடிகள் மட்டும் தங்கள் காதலை காலத்திற்கும் அழியாமல் இருக்க இந்த காதல் வங்கிக்கு வந்து பத்திரப்படுத்துகின்றனர்.

மரினாவின் வீட்டின் அடிதளத்தில் செயல்படும் இந்த வங்கியில் மொத்தம் ஒருலட்சம் சிறிய இழுப்பறைகள் உள்ளன. இங்கு வரும் காதல் ஜோடிகள் ஒருவரின் மீது ஒருவர் கொண்ட அன்பை, தங்களின் இன்பமயமான தருணங்களையும் கடிதமாக எழுதி இந்த இழுப்பறைகள் வைத்துவிட்டு செல்கின்றனர்.

காதல் ஜோடிகளின் கடிதங்களோடு இந்த அறைகளில் சுமார் 174 வருட ஒரு கவிதையும் வைக்கப்படுகிறது. 2900 வரிகளை கொண்ட இந்த கவிதை தான் இந்த காதல் வங்கி உருவாக காரணம்.

174 வருடங்களுக்கே முன்னால் சோலோவாக்யைச் சேர்ந்ந கவிஞர் அண்ட்ரீஜ் சலெட்கோவிக், மரினா பிஸ்ச்லோவா என்ற பெண்னை காதலித்து வந்தார், தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக 2900 வரிகளில் ஒரு கவிதையை எழுதி தந்தார். ஆனால் மரினாவின் பெற்றோர் அண்டரீஜ்-ன் ஏழ்மை நிலையை காரணம் காட்டி மரினாவை பணக்கார ‘ஜீஞ்சர் பிரட்’ தயாரிப்பாளருக்கு மணம் முடித்துவிட்டனர். உலகின் எத்தனையோ சேராத காதல்களில் ஒன்றாக அண்ட்ரீஜ், மரினாவின் காதலும் சேர்ந்துக் கொண்டது ஆனால் அவர்களின் காதலின் சாட்சியாக அந்த 2900 வரி கவிதை வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அப்படி உலகின் ஒவ்வொரு காதல் ஜோடியின் காதலும் வாழ வேண்டும் என்ற நோக்கில் உருவானதுதான் இந்த காதல் வங்கி இது அண்ட்ரீஜ்-ன் காதலி மரினா இறுதியாக வாழ்ந்த வீட்டின் அடித்தளத்தில் தான் இருக்கிறது. அண்ட்ரீஜ், மரினா காதலின் நினைவுகளோடு உலக காதல் ஜோடிகளின் நினைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த காதல் வங்கியும் உலகின் ஒரு அதிசயம் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s