நம் நாட்டில் ஒரு மனிதனை ஜாதி, மதத்தின் பெயரைச் சொல்லி அவனை பிரித்து, அவனுக்கு கல்வி மறுத்து, வழிபாட்டு உரிமை மறுத்து, அவன் மீது எல்லையற்ற வன்முறை கட்டவிழ்ப்பதுப் போல் கொடுமை உலகில் வேறெங்கிலும் உண்டா எனில் நவீன உலக வரலாற்றின் துவக்கும் முதல் இன்றுவரை தொடரும் ஜாதி கொடுமைப் போன்ற இன்னொன்று தான் நிறத்தின் அடிப்படையில் சக மனிதனுக்கு அடிப்படை உரிமை மறுக்கும் வெள்ளை ஆதிக்க நிற வெறி.
ஆனால் இன்று வெள்ளை நிற வெறியின் அடித்தளத்தையே ஆட்டிப் பார்க்கும் ஒரு செய்தியாக வந்திருப்பதுதான் தன்னை உயர்ந்தவனாக கருதி கொள்ளும் வெள்ளையர்களும் ஒருகட்டத்தில் கருப்பாக இருந்துள்ளனர் என்பதாகும். அது மட்டுமல்லாமல் இன்று இருக்கும் வெள்ளை நிறம் வைட்டமின் ‘A’ குறைபாட்டினால் வந்திருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.
1903-ஆம் ஆண்டு இங்கலாந்தில் வாழ்ந்த ‘செட்டார்’ என இனத்தை சேர்ந்த ஒரு மனிதனின் எழும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியம் அதை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியது. அந்த பரிசோதனையின் மூலம் ஐரோப்பியர்களின் வெள்ளை நிறம் மிக பிற்காலத்தில் வந்தது என்கிறது.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இங்கிலாந்தின் செட்டார் பள்ளத்தாக்கில்’ கவ்’ குகையில் 115 ஆண்டுகள் முன்பு கண்டெடுக்கப்பட்ட செட்டார் மனிதன். இன்றைய ஐரோப்பியர்களை விட உயரம் குறைவாகவும், அவனின் முடி வழக்கத்தை விட கருமையாகவும், அவன் விழிகள் நீல நிறத்திலும், அவன் தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்திருக்கலாம் என்கிறது ஆய்வு.
தற்போது உள்ள நிறம் ஐரோப்பியர்களுக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கில் இருந்து புலம் பெயர்ந்த மக்களின் மூலமும் அல்லது வைட்டமின் டி குறைபாட்டினால் வந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர். ஆனால் அவர் எப்படி வெள்ளையாக மாறினர் என்பது தெளிவாக தெரிகிறது அது இன்று நிறத்தை காட்டி பேதம் கடைப்பிடிக்கும் இவர்களும் ஒரு காலத்தில் கருப்பு நிறத்தினர் தான். இனி மேலாவது வெள்ளையாக எண்ணி கண்ட கிரீம்களை போடுவதை தவீர்ப்போமாக.
……………சிரிப்பு மன்னன்