மடிக்கணினியை பாதுகாக்க சில டிப்ஸ் !!

மடிக்கணினியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே மடிகணினியைப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்கணினியை பாதுகாக்க சில வழிகள்…

✓ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System-த்தை புதுப்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில் மடிக்கணினியில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள்.

✓ மடிக்கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய ‘சில்க்” துணிகளைப் பயன்படுத்தலாம். அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liquid பயன்படுத்தி துடைக்கலாம். வேறு துணிகளையோ அல்லது வெறும் கைகளையோ பயன்படுத்தி மடிக்கணினியை துடைக்க கூடாது.

✓ மடிக்கணினிக்கு என கொடுத்த Charger பயன்படுத்த வேண்டும். வேறு Charger-ரை பயன்படுத்தினால் வெப்ப மாறுதல் மற்றும் அதிக மின்னோட்டம் காரணமாக உங்களுடைய மடிக்கணினி செயலிழந்து போகலாம். முடிந்த வரை வேலை செய்து கொண்டிருக்கும்பொழுதே மடிக்கணினியை Charge செய்வதை தவிர்க்கவும்.

✓ அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது ஏனெனில் தோல் பாதிப்பு வரலாம். மடிக்கணினிக்கு என விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

✓ Anti-Virus Software ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களுடைய மடிக்கணினிக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

✓ தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக மடிக்கணினியை பயன்படுத்தினால் விரைவில் வெப்பமடைந்து மடிக்கணினியின் ஆயுட்காலம் குறையும் வாய்ப்புள்ளது.

✓ மடிக்கணினியின் Serial Number-ரை குறித்து கொள்ளவேண்டியது அவசியம். ஏனெனில் மடிக்கணினி தொலைந்துவிட்டால் Serial Number உதவியின் மூலம் அறியலாம்.

✓ வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களுடைய மடிக்கணினியை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது.

✓ மடிக்கணினிக்கு என கொடுத்திருக்கும் உறை பையை (Laptop Bag) பயன்படுத்துவது பாதுகாப்பை அளிக்கும்.

✓ பணிக்கு இடையே சிறிது நேரம் அவகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், மடிக்கணினியை Hibernate நிலையில் வைப்பது சிறந்தது. அதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படும்.

✓ அதிக தூரப் பயணங்களின் போது மடிக்கணினியை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மடிக்கணினியில் தூசி, துகள்கள் வராமல் இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s