இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான வழிகள் !!

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான வழிகள் !!

தினமும் பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தமும், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமையோபதியும், வயதானவர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியரும், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை என எந்த வயதினருக்கும் இதய நோய்கள் திடீரென ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வுதான் நமக்கு இப்போது அவசிய தேவையாக இருக்கிறது.

✓ இயற்கை விவசாய வீழ்ச்சி, உணவு பழக்கவழக்க மாற்றங்கள், துரித உணவில் கலந்துள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு, குளிர்பானங்கள், புகையிலைப் பழக்கங்கள், மாசுபடிந்த சுற்றுச்சூழல், உடல்பருமன் ஆகியவற்றின் மூலமே இதயம் சம்மந்தமான நோய்கள் எளிதில் அனைத்து தரப்பினரையும் தாக்கிவிடுகின்றன.

✓ முக்கியமாக, 25 வயதிலேயே இதயநோயின் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. இனி இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டாலே போதும். இதயம் சுகம் பெறும்.

✓ இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தாலும் ஒட்டுமொத்த உடலும் சோர்ந்துவிடும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சி :

✓ தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்கள், குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

மது-புகை நமக்கு பகை :

✓ மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு இரத்தக் குழாயினை சுருக்கி, இதயத்துடிப்பின் எண்ணிக்கை மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

உணவே மருந்து :

✓ இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக்காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றன.

✓ இதயநோய்கள் வராமல் தடுப்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். இந்த அமிலம் அதிகம் உள்ள பிஸ்தா, முந்திரி ஆகிய நட்ஸ் வகைகள், மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க நட்ஸ்கள் மட்டுமின்றி விதைகளும் உதவும். இங்கு இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் விதைகள் பற்றிப் பார்ப்போம்.

1. ஆளி விதைகள்

2. பூசணி விதைகள்

3. எள்ளு விதைகள்

4. வெந்தயம்

5. சியா விதைகள்

✓ மனித உடலில் மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிக்கின்றது. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோதுதான் மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியைத் தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க, பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க வைட்டமின் ஏ, ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ள உணவுகளும் தேவை.

✓ சில வேலைகளை எப்படி முடிப்பது அல்லது ஆரம்பிப்பது என பல குழப்பங்களுடனே வேலை செய்து தோல்வியை தழுவுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பி-6, பி-12 மற்றும் ஃபோலேட் ஆகிய இந்த மூன்று பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களை எடுத்துக் கொண்டால் நரம்புகள் ஊக்கம் பெறும். தெளிவாகத் தகவல்களைக் கொண்டு போய் மூளையில் சேர்க்கும்.

இதையெல்லாம் கடைப்பிடித்து உங்கள் இதயத்தை இதமாக்குங்கள்…..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s