பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டணை தெரியுமா

சீனா :

சீனாவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நிச்சயம் மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் பாலியல் குற்றவாளிக்கு அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது.

இரான் :

இரான் நாட்டில் பாலியல் குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் இங்கேயும் நிச்சயம் மரண தண்டனைதான். பெரும்பாலும் பொதுமக்கள் முன்னிலையில் தான் நிறைவேற்றப்படுகிறது, சில முறை மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு 100 கசையடிகள் வழங்கப்படுகிறது. இதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தான்.

நெதர்லாந்து :

நெதார்லாந்தில் பாலியல் அத்துமீறலுக்கு கூட தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. ஒருவரின் அனுமதியின்றி முத்தம் கொடுத்தால் கூட அதனை குற்றமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

குற்றத்தைப் பொருத்தும், குற்றவாளியின் வயதைப் பொருத்தும் நான்கு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் :

பிரான்ஸ் நாட்டில் ஒருவர் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். பதினைந்து ஆண்டுகளும் அவருக்கு பல்வேறு விதமான டார்ச்சர்கள் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த தண்டனை முப்பது ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் படுகிறது.

சிலருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது

ஆஃப்கானிஸ்தான் :

பிற நாடுகளைப் போல குறிப்பாக இந்தியாவைப் போல, குற்றம் நடந்தது உண்மை,இவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கவே ஆண்டுக்கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான்கே நாட்களில் எல்லாம் முடிந்திடும். இந்த நான்கு நாட்களில் குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்கான தண்டனையும் நிறைவேற்றப்படும்.

ஆஃப்கானிஸ்தானில் பாலியல் வழக்கில் சிக்கினால் என்ன தண்டனை தெரியுமா? பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொலை செய்கிறார்கள்.

வடகொரியா :

இவர்கள் ஆஃப்கானிஸ்தானை விட ரொம்ப ஃபாஸ்ட். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைத்திடுகிறது. குற்றவாளி இவர் தான் என்று நிரூபிக்கப்பட்ட அடுத்த நிமிடமே துப்பாக்கியினால் தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றிவிடுகிறார்கள்.

ரஸ்யா :

பாலியல் குற்றவாளிகளுக்கு குறைந்தது மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து ஆரம்பிக்கிறது, அவர்கள் செய்திருக்கும் குற்றத்தின் தன்மை பொருத்து மூன்றாண்டுகளிலிருந்து எத்தனை ஆண்டுகாலம் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

சவுதி அரேபியா :

சவுதி அரேபியாவில் ஒருவன் பாலியல் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பொதுமக்கள் முன்னிலையில் அவனின் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வாக அங்கே இருக்கிறது.

யுனைட்டட் அரபு எமிரேட்ஸ் :

இங்கே பாலியல் குற்றவாளிக்கு கண்டிப்பாக மரண தண்டை தான் தீர்ப்பாக உள்ளது. குற்றவாளியை தூக்கிட்டு தண்டனை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த விதமான கருணையும் காட்டப்படுவதில்லை.

குற்றம் செய்தால் அடுத்த ஏழே நாட்களில் அவனுக்கு மரணம் நிச்சயம்.

எகிப்து :

எகிப்தில் பாலியல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது, பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டு குறிப்பிட்ட காலம் வரையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்கிறார்கள். இதனால் மக்கள் குற்றம் செய்ய அஞ்சுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்கா :

அமெரிக்காவில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கின்றன. ஒன்று ஸ்டேட் லா இன்னொன்று ஃபெடரல் லா. அவன் செய்த பாலியல் குற்றம் ஃபெடரல் லாவுக்கு கீழே வந்தால் அவனுக்கு அந்த சட்டத்தின் படி வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

இதே ஸ்டேட் லாவில் வந்தால் அந்தந்த மாநிலங்களின் சட்டத்தின் படி தண்டனை நிறைவேற்றப்படும்.

நார்வே :

நார்வேயில் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு நான்கு ஆண்டுகள் முதல் பதினைந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. அவன் ஏற்படுத்திய பாதிப்புகளின் அளவைப் பொருத்து தண்டனையின் அளவு கூடவும் குறையவும் செய்கிறது.

இதே போல இஸ்ரேலில் நான்கு ஆண்டுகள் முதல் பதினாறு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s