250 கிலோ எடையை குறைத்த உலகின் சாதனை மனிதர்!
விண்வெளியில் தூக்கம்
பூமியைப் போலல்லாமல் விண்வெளியில் ஈர்ப்புவிசை கிடையாது. அதனால் அங்கு எல்லா விதமான பொருட்களும் பறந்தவாறே இருக்கும் மனிதன் அப்படி இருக்க ஆராய்ச்சி செய்வதற்காக விண்வெளி செல்லும் விண்வெளி வீரர்கள் எப்படி உறங்குவார்கள் என்று ல்
மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன?
(Imagecaptionமொஹம்மதநூர்)
ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள்.
மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வருவாயை கொண்டுதான் அவர்கள் ஜீவிக்க வேண்டும்.
இந்த இடம் வங்காளதேசத்தில் உள்ள உள்ள பலுகாலி அகதி முகாம். மியான்மரிலிருந்து வன்முறைக்கு பயந்து தங்கள் உயிரை காத்துக் கொள்ள இங்கே வந்தவர்கள் உள்ளார்கள்.
சொந்த நாட்டிலேயே அந்நியப்பட்டுப் போன இந்த குழந்தைகளில் பலர், தங்கள் கண் எதிரிலேயே தங்கள் உற்றார் உறவினர்கள் இறந்ததை பார்த்தனர். துயர்மிகு அந்த நாட்கள் கொடுத்த நினைவுகள் வலி மிகுந்தவை. என்றுமே மறக்க இயலாத ஆறாத காயத்தின் வலியை அவை கொடுக்கின்றன; கவலைக் கொள்ள வைக்கின்றன.
அந்த முகாமில் ஏராளமான சிறுவர்கள் இருக்கிறார்கள்.
அந்தச் சிறுவர்களில் ஒருவர் மட்டும் மிகவும் அமைதியாக ஜன்னல் ஒன்றின் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் மொஹம்மத் நூர். அவர் வயது 12. அந்த சிறுவனின் தந்தை நீண்ட காலமாக நோய்வாய்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அவர் காலமானார்.
மியான்மரில் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு மொஹம்மத் நூரின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியது.
மொஹம்மத் நூர் சொல்கிறார், “அப்போது நான் சந்தையில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ முகமூடி அணிந்த சிலர் வந்தனர். அவர்கள் கத்தியால் மக்களை குத்த தொடங்கினர். என்னுடைய இரு உறவினர்கள் அந்த வன்முறையில் இறந்தனர். நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். அடுத்த சில மணிநேரங்களில் நாங்கள் வங்க தேசத்திற்கு பயணமானோம். ஆனால், அந்த நினைவுகள் என்னை அச்சுறுத்துகின்றன. நான் எப்போதும் எனக்குள்ளே ஒரு வலியை உணர்கிறேன்.”
வங்கதேசம் நோக்கி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரில் மோசமான வன்முறை வெடித்தது. இதன் பின்னர், ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள, வன்முறையிலிருந்து தப்பிக்க வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன சர்வதேச உதவி அமைப்புகள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறுகின்றன அந்த அமைப்புகள்.
மனநல ஆலோசனை
மஹ்மூதா ஒரு மனநல மருத்துவர். இவர் கடந்த நான்கு மாதங்களாக வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள ஒரு சந்தையில் பணிபுரிந்து வருகிறார்.
அவர் அகதி முகாம்களில் உள்ள ரோஹிஞ்சா குழந்தைகளின் நிலை மிக மோசமாக உள்ளது என்கிறார்.
அவர், “கடந்த காலங்களில் அந்த குழந்தைகள் பார்த்த விஷயங்கள், அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுத்துள்ளன. சிலர் தங்கள் பெற்றோர் தங்கள் கண் முன்னால் கொலை செய்யப்படுவதை பார்த்து இருக்கிறார்கள். வீடுகள் கொளுத்தப்படுவதை சிலர் பார்த்து இருக்கிறார்கள். பலர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவர்களுக்கு இதிலிருந்து மீள மனநல ஆலோசனை தேவைப்படுகிறது.” என்கிறார்.
குழந்தைகள் பொறுப்பில் குடும்பங்கள்
வங்கதேசத்தில் ஏராளமான அகதிகள் முகாம்கள் உள்ளன. அதில் உள்ள ஏறத்தாழ 5000 குடும்பங்களை நிர்வகிப்பது சிறுவர்கள்தான்.

சிறு வயதிலேயே அவர்களின் தோள்களில் கடுமையான சுமை வந்து சேர்ந்துவிட்டது. அந்த பருவத்திற்கே உரிய வண்ணமயமான ஓர் உலகில் இல்லாமல், அழுத்தம் தரும் சூழலில் வாழ்கிறார்கள்.
இந்த அகதி முகாம்களில் அவ்வபோது மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த மருத்துவர்களுடன் பேசுகையில், இந்த குழந்தைகளுக்கு காலரா, காய்ச்சல், ஊட்டசத்து குறைபாடு உள்ளதாக கூறுகிறார்கள்.
மீடியாகோ சா ஃபிரான்ஸியா என்னும் சர்வதேச உதவி அமைப்பை சேர்ந்த மருத்துவர் சிண்டி ஸ்காட் நம்முடன் பேச ஒப்புக் கொண்டார்.
மன அழுத்தம்

குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார் சிண்டி ஸ்காட். அவர் நம்மிடம் சில ஓவியங்களை காண்பித்தார்.
“நாங்கள் குழந்தைகளிடம் அவர்களின் சுற்றுச்சூழல் குறித்து ஓவியம் வரைய சொன்னோம். அனைவரும் வரைந்தார்கள். ஆனால், 9 வயதுடைய ரோஹிஞ்சா சிறுவன், மலை, மரங்கள் மற்றும் நதி வரைந்தார். அதுமட்டுமல்ல, தாழப் பறக்கும் ஒரு ஹெலிகாப்டர் தங்கள் வீடுகளின் மீது குண்டுகள் போடுவது போலவும் வரைந்தார். இதுதான் அங்குள்ள குழந்தைகளின் நிலை. இந்த அளவுக்கு மன அழுத்தத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் ஸ்காட்.
குழந்தைகளுக்கு மற்ற அனைத்தையும்விட இப்போது உளவியல் சிகிச்சைதான் உடனடியாக தேவைப்படுகிறது என்கிறார்கள் உளவியல் சிகிச்சை வல்லுநர்கள்.
Article published in BBC Tamil.
இந்திய மதிப்பில் 14 கோடிக்கு தன் கற்பபையை விற்ற மாடலிங் அழகி…
அலெக்ஸாண்டிரா கெஃப்ரென ரோமானியாவை சேர்ந்த மாடல் அழகி. வெறும் 18 வயதே நிரம்பிய இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் முறையாக தனது கன்னித்தன்மையை 1.7 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தொகை வந்துள்ளதாக செய்திகள் வெளியிட்டு உலக பிரபலம் அடைந்தார்.
14 கோடிக்கு ஏலம் !
இப்போது இவர் கடைசியாக தனது கற்பை ஒரு பெயர் வெளியிடப்படாத ஹாங்காங் தொழிலதிபர் ஒருவரிடம் விற்றுள்ளார்.
மேலும், அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் தான் கற்பை ஏலத்தில் வென்ற ஹாங்காங் தொழிலதிபர் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர். அவருடன் போனில் பேசியதை வைத்தே இதை தான் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.
தனது கற்பை விற்பது குறித்து சென்ற நவம்பர் மாதம் முதலே பேசி வந்தார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். யார் அதிக தொகை கோருவோருக்கு தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு தரவிருப்பதாகவும் கூறிவந்தார்.
தனது கற்பை ஏலம்விட்டு விற்ற செய்தி வெளியான பிறகு அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனை அவரது குடும்பம் ஒதுக்கிவிட்டது. ஹாங்காங் தொழிலதிபருடன் தான் தங்கவிருக்கும் ஹோட்டலையும் புக் செய்துவிட்டார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். இந்த செயலை இவர் சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் உடன் இணைந்து செய்துள்ளார்.
அலெக்ஸாண்டிரா கெஃப்ரென்-க்கு வரும் தொகையில் இருந்து 20% சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ்-க்கு சென்றுவிடுமாம். இந்த நிகழ்வுக்கு பிறகு சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ்-க்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கற்பையும் விற்க அணுகியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய, ஆப்ரிக்கா, நார்த், சவுத் அமெரிக்கா மற்றும் அரபிக் நாடுகளிலும் இருந்து அதிகளவிலான பெண்கள் தங்களை தொடர்பு கொண்டு கற்பை விற்க முன்வருவதாக சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் கூறுகின்றனர்.
பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டணை தெரியுமா
சீனாவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நிச்சயம் மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் பாலியல் குற்றவாளிக்கு அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது.
இரான் நாட்டில் பாலியல் குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் இங்கேயும் நிச்சயம் மரண தண்டனைதான். பெரும்பாலும் பொதுமக்கள் முன்னிலையில் தான் நிறைவேற்றப்படுகிறது, சில முறை மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு 100 கசையடிகள் வழங்கப்படுகிறது. இதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தான்.
நெதார்லாந்தில் பாலியல் அத்துமீறலுக்கு கூட தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. ஒருவரின் அனுமதியின்றி முத்தம் கொடுத்தால் கூட அதனை குற்றமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
குற்றத்தைப் பொருத்தும், குற்றவாளியின் வயதைப் பொருத்தும் நான்கு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் ஒருவர் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். பதினைந்து ஆண்டுகளும் அவருக்கு பல்வேறு விதமான டார்ச்சர்கள் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த தண்டனை முப்பது ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் படுகிறது.
சிலருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது
பிற நாடுகளைப் போல குறிப்பாக இந்தியாவைப் போல, குற்றம் நடந்தது உண்மை,இவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கவே ஆண்டுக்கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான்கே நாட்களில் எல்லாம் முடிந்திடும். இந்த நான்கு நாட்களில் குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்கான தண்டனையும் நிறைவேற்றப்படும்.
ஆஃப்கானிஸ்தானில் பாலியல் வழக்கில் சிக்கினால் என்ன தண்டனை தெரியுமா? பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொலை செய்கிறார்கள்.
இவர்கள் ஆஃப்கானிஸ்தானை விட ரொம்ப ஃபாஸ்ட். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைத்திடுகிறது. குற்றவாளி இவர் தான் என்று நிரூபிக்கப்பட்ட அடுத்த நிமிடமே துப்பாக்கியினால் தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
பாலியல் குற்றவாளிகளுக்கு குறைந்தது மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து ஆரம்பிக்கிறது, அவர்கள் செய்திருக்கும் குற்றத்தின் தன்மை பொருத்து மூன்றாண்டுகளிலிருந்து எத்தனை ஆண்டுகாலம் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் ஒருவன் பாலியல் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பொதுமக்கள் முன்னிலையில் அவனின் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வாக அங்கே இருக்கிறது.
இங்கே பாலியல் குற்றவாளிக்கு கண்டிப்பாக மரண தண்டை தான் தீர்ப்பாக உள்ளது. குற்றவாளியை தூக்கிட்டு தண்டனை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த விதமான கருணையும் காட்டப்படுவதில்லை.
குற்றம் செய்தால் அடுத்த ஏழே நாட்களில் அவனுக்கு மரணம் நிச்சயம்.
எகிப்தில் பாலியல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது, பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டு குறிப்பிட்ட காலம் வரையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்கிறார்கள். இதனால் மக்கள் குற்றம் செய்ய அஞ்சுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கின்றன. ஒன்று ஸ்டேட் லா இன்னொன்று ஃபெடரல் லா. அவன் செய்த பாலியல் குற்றம் ஃபெடரல் லாவுக்கு கீழே வந்தால் அவனுக்கு அந்த சட்டத்தின் படி வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
இதே ஸ்டேட் லாவில் வந்தால் அந்தந்த மாநிலங்களின் சட்டத்தின் படி தண்டனை நிறைவேற்றப்படும்.
நார்வேயில் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு நான்கு ஆண்டுகள் முதல் பதினைந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. அவன் ஏற்படுத்திய பாதிப்புகளின் அளவைப் பொருத்து தண்டனையின் அளவு கூடவும் குறையவும் செய்கிறது.
இதே போல இஸ்ரேலில் நான்கு ஆண்டுகள் முதல் பதினாறு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படுகிறது.
இந்திய ரூபாயை பற்றிய சில தகவல்கள்!!
₹ரூபாயை அறிமுகப்படுத்தியவர் பாபரின் படையில் தளபதியாக இருந்து அரியணையை பிடித்த ஷேர்கான் ஆவார்.
₹அந்த காலகட்டத்தில் ரூபாய் என்பது காகித பணமல்ல 178கிராம் வெள்ளி நாணயங்கள் தான்.
₹ 1935-ல் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா நிறுவப்பட்டது.
₹ நாட்டின் அதிகாரபூர்வ முதல் காகித ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி 1938-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.
₹ மத்திய ரிசர்வ் வங்கி 10,000 ரூபாய் நோட்டுகளை 1938, 1954-ம் ஆண்டுகளில் அச்சிட்டது, ஆனால், 1946, 1978-ம் ஆண்டுகளில் இவை மதிப்பற்றவையாக அறிவிக்கப்பட்டன.
₹ இந்திய ஒரு ருபாய் நோட்டுகளில் நிதி செயலாளர் கையொப்பம் இருக்கும். 2 ருபாய் நோட்டுகளுக்கு மேல் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும்.
₹ நவம்பர் 8, 2016-ல் மகாத்மா காந்தி தொடரின் அனைத்து ரூ.500 மற்றும் 1000 ரூபாவையும் இந்திய அரசு திரும்பபெற்றது.
₹ ஐ.என்ஆர் என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
₹ முதல் 5 ரூபாய் நோட்டில் பிரிட்டன் மன்னர் நான்காம் ஜார்ஜின் படம் இடம்பெற்றிருந்தது.
₹ முதல் ஒரு ரூபாய் நோட்டு நவம்பர் 30, 1917 அன்று நடைமுறைக்கு வந்தது.
₹ புதிய 200 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் 25 ஆகஸ்ட் 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
₹ 1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன.
சில தகவல்கள்
ரஷ்யா விட புளுட்டோ சிறியது.
பஞ்சு மிட்டாய் இயந்திரங்களை பல் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
ஒரு ராணி தேனீ ஒரு நாளுக்கு 1500 முட்டைகள் இடுகிறது.
ஒரு அணிலின் வாழ்நாள் ஒன்பது ஆண்டுகள் ஆகும்.
.
பூனையின் வாலில் அதன் உடலில் உள்ள அனைத்து எலும்புகளில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் உள்ளது.
நீங்கள் 50 முதல் 100 முடிகள் ஒரு நாளைக்கு இழக்கிறீர்கள்.
எந்த நேரத்திலும், மேகங்கள் பூமியின் 60 சதவிகிதத்தை மறைக்கிறது.
சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ஒரு தீவு.
இந்தியாவின் சனி சிங்கனாப்பூர் கிராமத்தில், 2010 வரை 400 ஆண்டுகளுக்கும் மேலாக கதவுகள், பூட்டுகள், குற்றங்கள் இல்லை.
ஒரு சதுர அங்குல தோலில், 3 மில்லியன் செல்கள் உள்ளன.
தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள்!!
செரிமானம் :
செரிமானம் சார்ந்த பிரச்சனைகளினால் தொப்பை உண்டாகலாம்.
இவ்வாறு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு கலோரி குறைவான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் அவசியம் ஆகும்.
தாய்மை :
குறிப்பாக பெண்கள் குழந்தை பெற்றவுடன் இயற்கையாகவே தொப்பை உருவாகும்.
இதனை குறைப்பதற்கு மசாஜ் அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதனை பின்பற்றுவது நல்லது.
ஹார்மோன் :
ஒருசிலருக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தினாலும் தொப்பை உருவாகும்.
இவ்வாறு ஏற்படும் தொப்பையை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகும்.
மேலும் உங்களுடைய உணவுப்பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஸ்ட்ரஸ் :
தூக்கமின்மை அல்லது ஸ்ட்ரஸ்ஸினால் தொப்பை ஏற்பட்டிருக்குமானால் கீழ் வயிறு மட்டும் துண்டாக தெரியுமளவிற்கு தொப்பை இருக்கும்.
பிறர் ஏழு மணி நேரம் தூங்குகிறார்கள் என்றால் நீங்கள் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் தேவை.
காபி மற்றும் டீ அதிகப்படியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும்.
கேஸ் :
உங்கள் உடலில் அதிகப்படியான கேஸ் சேர்ந்திருந்தால் கூட தொப்பை உருவாகும்.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இந்த கேஸ் பிரச்சனையும் இருக்கும்.
ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் அதிக இடைவேளி விடுவதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரத்தில் அதிகமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான உடற்பயிற்சி தேவையில்லை கட்டுப்பாடான ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
கொழுப்பைக் குறைக்கும் கடுகு எண்ணெய்!!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும், வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளது.
கடுகு விதையில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் உடலின் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இப்போது கடுகு எண்ணெயின் மருத்துவக் குணங்களைப் பற்றி காண்போம்.
கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால் தான், இதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும்.
எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டுமல்ல, உடல் வலுப்பெறவும் தான்.
விஷம், பூச்சிமருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர் விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும்.
இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுப்போட்டால் இரத்தக்கட்டு மறையும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்றுப் போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.
தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.
இந்தியா 2017
லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி உலகில் 4ஜி டேட்டா வேகம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.
ஊழல் மலிந்த நாடுகள் குறித்து ட்ரான்ஸ்பிரன்சி இன்டர் நேசனல் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியா 81 வது இடத்தை பெற்றுள்ளது போன வருடம் இந்தியா 77 வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.
(UNAIDS) அய்கிய நாடுகளின் எட்ஸ் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
இந்தியா ஏழை பணக்கார வித்தியாசத்தில் 152 நாடுகள் கொண்ட பட்டியலிலை 132வது இடத்தை பெற்றுள்ளது.