இன்று ஒவ்வொரு ஆண்டும் நாம் ஆங்கிலப் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடி கொண்டு வருகிறோம். புத்தாண்டை வரவேற்கும விதத்தில் அதற்கு முந்தைய ஆண்டின் இறுதி நாளின் இரவிலிருந்தே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் துவங்கிவிடும். வான வேடிக்கைகள், மேள தாள வாத்திய இசை கச்சேரிகள், பப்புகள், டிஸ்கோ என புத்தாண்டு வரவேற்பு கலை கட்ட அதில் தவறாமல் இடம் பெறுவது அழகிய மின் விளக்குகள். இன்று எனக்கு தெரிந்து மின் விளக்குள் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நட்சத்திரங்கள் இல்லாத வானம் போல் வெறுமையாக தான் இருக்கும்.
ஆனால் உங்களுக்கு தெரியுமா 1880 க்கு முன் உலக புத்தாண்டில் மின் விளக்கு என்ற அம்சமே இல்லை என்று. 1880ஆம் ஆண்டு தான் மின் விளக்கே இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
1880 ஆம் புத்தாண்டு விழாவை முன்னிட்டு நியூஜெர்சி மென்லோ பார்க்கில் ஒரு மேடையில் 800 மின் விளக்குகளை ஒரே நேரத்தில் எரியவிட்டு தனது நூறு தோல்விகளுக்கு பிந்தய வெற்றியை புத்தாண்டுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடானார் தாமஸ் ஆல்வா எடிசன்.
புத்தாண்டோடு புத்தொளியும் சேர்ந்துக் கொண்ட ஆண்டுதான் 1880 ஆம் ஆண்டு அன்றிலிருந்து இன்றுவரை அந்த பிணைப்பை யாராலும் நீக்க முடியவில்லை அல்லது ஒளியற்ற புத்தாண்டை பார்க்க யாருக்கும் விருப்பமூம் இல்லை எனலாம்.
………………சிரிப்பு மன்னன்