செரிமானம் :
செரிமானம் சார்ந்த பிரச்சனைகளினால் தொப்பை உண்டாகலாம்.
இவ்வாறு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு கலோரி குறைவான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் அவசியம் ஆகும்.
தாய்மை :
குறிப்பாக பெண்கள் குழந்தை பெற்றவுடன் இயற்கையாகவே தொப்பை உருவாகும்.
இதனை குறைப்பதற்கு மசாஜ் அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதனை பின்பற்றுவது நல்லது.
ஹார்மோன் :
ஒருசிலருக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தினாலும் தொப்பை உருவாகும்.
இவ்வாறு ஏற்படும் தொப்பையை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகும்.
மேலும் உங்களுடைய உணவுப்பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஸ்ட்ரஸ் :
தூக்கமின்மை அல்லது ஸ்ட்ரஸ்ஸினால் தொப்பை ஏற்பட்டிருக்குமானால் கீழ் வயிறு மட்டும் துண்டாக தெரியுமளவிற்கு தொப்பை இருக்கும்.
பிறர் ஏழு மணி நேரம் தூங்குகிறார்கள் என்றால் நீங்கள் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் தேவை.
காபி மற்றும் டீ அதிகப்படியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும்.
கேஸ் :
உங்கள் உடலில் அதிகப்படியான கேஸ் சேர்ந்திருந்தால் கூட தொப்பை உருவாகும்.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இந்த கேஸ் பிரச்சனையும் இருக்கும்.
ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் அதிக இடைவேளி விடுவதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரத்தில் அதிகமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான உடற்பயிற்சி தேவையில்லை கட்டுப்பாடான ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும்.