* தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. எந்த பழங்களில் எந்த வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பதை தெரிந்துகொண்டு பழங்களை உட்கொண்டால் மிகவும் நல்லது.
*மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
* சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
* செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.
* பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.
* பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும்.
* நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.
* பப்பாளிப் பழம் மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலர்ஜி போன்றவைகளுக்கு சிறந்தது.
* ஆப்பிள் வயிற்றுப் போக்கு, சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
* திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
* செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.
* கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலி குணமாகும்.
* அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
* மாதுளை பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.
* அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
* நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மற்றும் வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும்.
* கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.
* கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும். வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும்.
நோய்களுக்கு மருந்தாக இயற்கையில் கிடைக்கும் பழங்களை உண்டு நோய்களை போக்கிக் கொள்வோம்.